தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

புத்தம் புதிய பூமி

பூமியை போன்ற புதிய கிரகத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு, நாசாவின் 'டெஸ்' விண்கலம் மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'கிளைஸ் 12பி'. இது பூமியில் இருந்து 40 ஒளி ஆண்டுகள் துாரத்தில் அமைந்துள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது ஓராண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு. இது பூமியை விட சிறிய அளவு உடையது. இதன் வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ். இதற்கு பூமியை போல வளிமண்டலம் இருக்கிறதா எனவும், அதன் இரவு நேர வெப்பநிலை தரைப்பகுதியில் தண்ணீர் உருவாக ஏதுவாக உள்ளதா என்பதையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

தகவல் சுரங்கம்

பெண்களுக்கு அதிகாரம்

அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட அரசின் உயர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 24ல் 'சர்வதேச பெண் அதிகாரிகள் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. உலக நாடுகளில் பெண்கள் அதிகாரத்தில் இருக்கும் போது, எளிய மக்கள், சுற்றுச்சூழல், சமூக ஒற்றுமைக்கு ஏற்ற சட்டங்களை நிறைவேற்றுகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் 193 நாடுகள் ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஆனால் இதில் 31 நாடுகளில் மட்டுமே பெண் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us