உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / எனிமி ஆப் தி ஸ்மக்ளர்

எனிமி ஆப் தி ஸ்மக்ளர்

தயாரிப்பு : எஸ்.ஆர்.ட்ரீம்ஸ்டூடியோ
இயக்கம் : டி.சமயமுரளி
நடிப்பு : சரண் சக்தி, ஸ்மேகா, லால், ராதிகா, பால சரவணன், மற்றும் ஜேடி சக்ரவர்த்தி, காளி வெங்கட்
ஒளிப்பதிவு : கவின்பாஸ்கர்
இசை : ஸ்ரீவட்சன்
வெளியான தேதி : அக்டோபர் 30, 2026
நேரம் : 2 மணிநேரம் 10 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5

துபாயில் இருக்கும் போதை மருந்து டான் லால், 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள சரக்கை கண்டய்னர் மூலம் கப்பலில் இந்தியாவுக்கு அனுப்புகிறார். அதை லோக்கல் ஏஜெண்ட் ஜே.டி.சக்ரவர்த்தி துறைமுகத்தில் இருந்து வெளியே எடுக்க முயற்சிக்கிறார். அவர் டீமில் வேலை செய்யும் ஹீரோ சரண் சக்தியும், அவர் நண்பர் பாலசரவணனும் திட்டம்போட்டு கடத்துகிறார்கள். அதை மீட்க ஜே.டி.சக்ரவர்த்தியும், கஸ்டம்ஸ் அதிகாரி சமயமுரளியும் இருவரையும் துரத்துகிறார்கள். கடைசியில் அந்த போதை பொருள் யார் கை வசம் சென்றது என்பதை சொல்லும் படம் எனிமி ஆப் தி ஸ்மக்ளர்.

சொந்த வீட்டை மீட்க முடியாத பணப்பிரச்னை, காதல், எதிர்கால பயத்தால் ஜே.டி.சக்ரவர்த்தி கும்பலில் சேருகிறார் ஹீரோ சரண். தன் நண்பனுடன் சேர்ந்து பல சிக்கலான கண்டய்னர்களை வெளியே எடுக்கிறார். கடைசியில் குஜராத் துறைமுகத்திற்கு வரும் 25 ஆயிரம் கோடி சரக்கை கடத்த, வில்லங்கம் ஆரம்பிக்கிறது. அம்மா செண்டிமெண்ட், காதல், கஸ்டம்ஸ் ஆபிசில் புத்திசாலிதன சீன்களில் ஸ்கோர் பண்ணுகிறார் ஹீரோ சரண். பணத்துக்கு ஆசைப்பட்டு வில்லன் டீம், கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்க தவிக்கிறார்.

இவரை விட வில்லன்களாக வரும் லால், ஜே.டி.சக்ரவர்த்தி நடிப்பில் கலக்குகிறார்கள். அதிகம் நடிக்காமல் பார்வை பாடி லாங்குவேஜில் மிரட்டுகிறார் ஜே.டி. சக்ரவர்த்தி. துபாய் டான் ஆக லாலும் பல இடங்களில் கவர்கிறார்.

நிஜத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியான சமயமுரளி, கதையில் அதே அதிகாரியாக நடித்துள்ளார். இடைவேளைக்குபின் அவர் தான் ஹீரோ மாதிரி தெரிகிறார். அவர் துறை சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவான கதை என்பதால் கடத்தல், கஸ்டம்ஸ் சம்பந்தப்பட்ட சீன்கள் பிரஷ் ஆக இருக்கிறது. குறிப்பாக துறைமுகம் கண்டய்னர், கடத்தல் அது குறித்த டீடெயில் இதுவரை எந்த படத்திலும் காண்பிக்கப்படாதது.

ஹீரோ அம்மாவாக ராதிகா வருகிறார். சில செண்டிமெண்ட் சீன்களில் அவர் நடிப்பு ஓகே. ஆனாலும் அவர் கேரக்டரை இன்னும் டெவலப் பண்ணி சிறப்பாக காண்பித்து இருக்கலாம்.

ஹீரோயின் அண்ணன் ஆக காளி வெங்கட் வந்து பாசத்தை கொட்டி இருக்கிறார். ஹீரோ நண்பனாக வரும் பாலசரவணனும் நல்ல நடிப்பு தந்து இருக்கிறார். ஆனாலும் காமெடி பெரிதாக செட் ஆகவில்லை.

போதை மருந்து கடத்தல், பெரிய டான், சின்ன டான், சிண்டிகேட் ஆகியவை பல படங்களில் பார்த்தது. ஹீரோ சரண் என்றாலும் ஒரு கட்டத்தில் இன்னொரு ஹீரோவாக சமயமுரளி என்ட்ரி ஆகி அவரை துரத்துகிறார். வில்லன் ஜேடி டீமும் அவர்களை துரத்த அந்த இடங்கள் ஸ்பீடு.

ஸ்ரீவட்சன் இசை, அந்த குத்துபாட்டு ஒகே. துறைமுகம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கவின் பாஸ்கர் வொர்க் தனித்து தெரிகிறது. ஆக் ஷனில் தவசிராஜ் முத்திரை பதித்து இருக்கிறார்.

போதை மருந்து கடத்தல் கதையை காதல், செண்டிமெண்ட், துரோகம், விசாரணை கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர் சமயமுரளி. அவரே கஸ்டம்ஸ் ஆபிசராக நடித்து ஹீரோயிசம் காண்பித்து இருக்கிறார். கடைசியில் அவரே ஜெயிப்பது மாதிரி கதையை முடித்து இருக்கிறார். அதை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கலாம்.

எனிமி ஆப் தி ஸ்மக்ளர் - கஸ்டம்ஸ் துறையின் இன்னொரு பக்கம்



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !