பிரபுதேவா- விஷ்ணு மஞ்சு இணையும் புதிய படம்
ADDED : 10 minutes ago
தெலுங்கில் பிரபுதேவா - விஷ்ணு மஞ்சு ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்ட திரைப்படம், பின்னர் எந்தவொரு முக்கிய அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல்களின்படி, இப்படத்திற்கான பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும், படக்குழுவினரிடமிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்போவதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நடிகர்விஷ்ணு மஞ்சுவே இப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. நகைச்சுவை கலந்த பொழுதுபோக்குப் படமாக இது உருவாகவுள்ளது. விஷ்ணுவின் திரை ஆளுமையும், பிரபுதேவாவின் கலகலப்பான பாணியும் இணைவது இப்படத்தை ஒரு சுவாரசியமான கூட்டணியாக மாற்றியுள்ளது.