உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டெத் ரெயில்வே : 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட கதை

டெத் ரெயில்வே : 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட கதை

2023ல் வெளிவந்த 'யாத்திசை' வரலாற்றுப் புனைவு படம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் அது. அந்த படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் தற்போது இயக்கி உள்ள படம் 'டெத் ரயில்வே'.

சசிகுமார், சமுத்திரகனி, கிஷோர், அசோக் செல்வன், கவுரி, சேயோன், பவானி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜே.கே. பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ.கமலக்கண்ணன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சர்தக் கல்யாணி, ஏ.சி.சார்லஸ் ராஜ் இசை அமைத்துள்ளனர். ஆர். சேது முருகவேல் ஜெகநாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் குறித்து தரணி ராசேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 1944 ஆம் ஆண்டில், ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டது டெத் ரயில்வே. இரண்டாம் உலகப்போர் தீவிரமடையும் பொழுது ஜப்பான் பர்மா, நாகலாந்தை ஆக்கிரமித்து இந்தியாவை நோக்கி முன்னேறியது. அவர்கள் தங்கள் ஆயுத மற்றும் போக்குவரத்துக்காக ரயில்வே வழியை அமைத்தனர். அந்த ரயில் பாதை அமைக்க, தமிழர்களும், கூலிகளும், அவர்களிடம் பிடிபட்ட வீரர்களும் பணியாற்றினார்கள். அந்த பாதை அமைக்கும்போது நோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒன்றரை லட்சம்பேர் பலி ஆனதாக வரலாறு சொல்கிறது. உண்மையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லை.

அத்தனை மனிதர்களை உயிர்ப்பலி கொடுத்துத்தான் அந்த ரயில்வே வேலையே நடந்திருக்கிறது. அதனால், அந்தப் பாதைக்கு பெயரே 'டெத் ரயில்வே' என்றாகிவிட்டது. ஆனால், இது டெத் ரயில்வே பற்றிய சரித்திரம் கிடையாது. அந்தக் காலகட்டத்தில், அதைச் சுற்றி நடந்த நிகழ்வுகள்தான் மையக்கதை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !