நவம்பர் 27ல் 13 படங்கள் ரிலீஸ் ; இந்தாண்டில் இது தான் அதிகம் : 200ஐ கடக்கப் போகும் 2026
2026ம் ஆண்டின் நவம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நவம்பர் 27ம் தேதியன்று 13 தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் அதிகபட்சமாக இந்தவாரம் தான் இவ்வளவு படங்கள் வெளியாக உள்ளன.
“606, சிட்டுக்குறிஞ்சி, டெலிவரி பாய், கோ 2 கோ, ஜெடூசி, மதுர மோசடி, மின்னும் ஓர் இரவு, மௌன மொழிகள், நெல்லை பாய்ஸ், பேய் பிடிச்சிருக்கு, நிறம், வட மஞ்சுவிரட்டு, சிக்னல் அட் 11:30” ஆகியவைதான் அந்த 13 படங்கள். இவற்றில் ஏதாவது ஒரு சில படங்கள் கடைசி நேரத்தில் வெளியாகாமல் போக வாய்ப்புண்டு.
கடந்த வாரம் வெளியான படங்கள் எப்படியும் நவம்பர் 27ஐக் கடந்தும் ஓடும். அதனால், இத்தனை படங்களுக்கும் தியேட்டர்கள் எப்படி கிடைக்கப் போகிறது என்பது ஆச்சரியம்தான்.
இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இந்த வருடத்திய படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிடும்.
கடந்த 2025ம் வருடத்தில் நவம்பர் மாத முடிவில் 258 படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வருடத்தில் 50 படங்கள் குறைவாகவே வெளியாகி உள்ளது.
அடுத்து டிசம்பர் மாதத்தில் வெளியாக உள்ள படங்களையும் சேர்த்தால் இந்த வருடத்தில் மொத்தமாகவே 225 படங்கள் என்ற எண்ணிக்கையுடன் முடியலாம்.