சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்'
ADDED : 13 minutes ago
லீஹரி பிக்சர்ஸ் சார்பில் சின்னத்தம்பி, ஹரி சங்கர் இணைந்து தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்'. கதையின் நாயகனாக டல்ஹவுசி பிரபு, கதை நாயகியாக வர்ஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் ஓஏகே. சுந்தர், பழ கருப்பையா, பொன்வண்ணன், சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹவுசி பிரபு இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் கூறும்போது “பணத்தை பதுக்குவதால் இயற்கை வளங்கள் அனைத்தும் அழித்தொழிக்கப்படுகின்றன. தானியங்களை பதுக்குவதால் செயற்கையாக பஞ்சங்கள் உருவாகின்றன. இதற்கான சட்டங்களும் திட்டங்களும் அயல்நாடுகளில் உள்ள தீவுகளில் தீர்மானிக்கப்படுகின்றன என்ற சர்வதேச அரசியலை, எந்தவித சமரசமும் இன்றி, அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அலசுகிறது இந்த படம்” என்றார்.