உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி

57வது இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நவம்பர் 20 ஆம் தேதியான நாளை முதல் கோவாவில் துவங்குகிறது. இந்த விழாவில் சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் அவரது சீடரான கே. பாக்யராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களது படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

பாக்யராஜ் கதை, வசனம் எழுதி கதாநாயகனாக நடித்த முந்தானை முடிச்சு படம் நவம்பர் திரைப்படம் 22ம் தேதி பகல் 12 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜ் கலந்து கொள்கிறார்.

பாரதிராஜாவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த முதல் மரியாதை படம் நவம்பர் மாதம் 23ம் தேதி அன்று காலை 11:30 திரையிடப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் நண்பரும், முதல் மரியாதை படத்தில் அவரோடு இணைந்து பணியாற்றியவருமான சித்ரா லட்சுமணன் கலந்து கொள்கிறார்.

இந்த படங்கள் தவிர்த்து இந்த விழாவில் ராதிகா நடிப்பிலும் சிவக்குமார் முருகேசன் இயக்கத்திலும் உருவான தாய் கிழவி, ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கூடு, சத்ய சிவா இயக்கத்தில் விஜயகுமார் நடித்துள்ள அறிவு, விஜய் மணி இயக்கியுள்ள அட்டப்படி, எஸ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஸ்குரோல் ஆகிய திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !