தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா'
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் நவம்பர் 5ல் வெளியான 'ராமாயணா' படம் இரண்டு வாரங்களில் தென்னிந்திய வசூலில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
ஒரு ஹிந்திப் படம் ஒவ்வொரு தென்னிந்திய மாநிலங்களிலும் 50 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை. தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு தெலுங்கு மாநிலங்களையும் ஒன்றாக சேர்த்து இந்த கணக்கு.
இதற்கு முன்பு, இந்த சாதனையை முதன் முதலில் 2017ல் 'பாகுபலி 2' படம் படைத்தது. அதற்கடுத்து கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படம் 2022ம் ஆண்டிலும், தமிழ்ப் படமான 'ஜெயிலர் 1' 2023ம் ஆண்டிலும், கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' 2025ம் ஆண்டிலும் படைத்துள்ளன.
கடந்த மாதம் வெளிவந்த தமிழ்ப் படமான 'ஜெயிலர் 2' படமும் தென்னிந்திய அளவில் தலா 50 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக இடம் பிடித்தது. தற்போது 'ராமாயணா' படம் 6வது படமாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்தின் இரண்டு பாகங்களும் இந்த சாதனையைப் புரிந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.