''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து
ADDED : 42 minutes ago
தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதியினர் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன். திருமணமாவதற்கு முன்பே அவர்களது ஜோடியான புகைப்படங்களால் காதலர்கள் பலரையும், காதலர்கள் கிடைக்காத பலரையும் பொறாமைப்பட வைத்தவர்கள்.
இன்று நயன்தாராவின் பிறந்தநாள். திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். வழக்கம் போலவே உணர்வுபூர்வமான கவித்துவமான வரிகளால் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.
அந்த வாழ்த்தில் அவர்களது வீட்டில் மாட்டியிருக்கும் ஜோடியான புகைப்படங்களை வீடியோவாக எடுத்து, 'நானும் ரவுடிதான்' படத்தின் 'நீயும் நானும்' பாடலை ஒலிக்கவிட்டு, வாழ்த்துப் பதிவில், “மீண்டும் பிறந்தாலும்…நீயே வேண்டும்…என்னுடைய உயிர், உலகமே…உன்னை நேசிக்கிறேன், எனது தங்கமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.