உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சண்டியர்' தலைப்பு பிரச்னை: தயாரிப்பாளர் சங்கம் பதில்

'சண்டியர்' தலைப்பு பிரச்னை: தயாரிப்பாளர் சங்கம் பதில்


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்கத்தின் வளர்ச்சி மற்றும் நிதி திரட்டுவது தொடர்பாக மூத்த தயாரிப்பாளர்கள், முன்னாள் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து நடந்த ஆலோசனை கூட்டம் இது.

கூட்டத்திற்கு பிறகு சங்கத்தின் தலைவர் தமிழ் குமரன் நிருபர்களிடம் கூறியதாவது: திரைப்படங்களுக்கான மானியம் வழங்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கையை முதல்வரிடம் வைத்தோம். அதை ஏற்று 2015 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 224 திரைப்படங்களைத் தேர்வு செய்து, தலா 7 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி 64 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி சிறப்புக் காட்சி உட்பட தினமும் ஆறு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தோம். கேட்ட உடனேயே ஒரே உத்தரவின் மூலம் அதனைச் செயல்படுத்திக் கொடுத்துவிட்டார்கள்.

வரும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்ட விழா நடத்தி, மூத்த தயாரிப்பாளர்களுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். என்றார்.

சண்டியர் படத்தின் டைட்டில் பிரச்னை குறித்து கேட்டபோது “தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தால், அது 10 ஆண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் வசம் இருக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அத்தயாரிப்பாளரின் அனுமதியோடு வேறு யார் வேண்டுமானாலும் அந்தத் தலைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே 13 ஆண்டுகளுக்கு முன்பே 'சண்டியர்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகிவிட்டது. ஆனால், அந்தப் பெயரில் படம் வெளியானபோது எந்த எதிர்ப்பும் எழவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !