பிளாஷ்பேக்: குறைந்த படங்களில் நடித்து விட்டு திடீரென குடும்ப வாழ்க்கைக்கு சென்ற சாரதா ப்ரீத்தா
சிவாஜி நடித்த 'ரிஷிமூலம்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு 6 வருடங்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு ராஜ்கிரண் நடித்த 'என் ராசாவின் மனசில' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் சாரதா ப்ரீத்தா. அதன் பிறகு கே.பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் 'சின்ன பசங்க நாங்க' படத்தின் மூலம் நாயகியானார்.
'புதுப்பட்டி பொன்னுத்தாயி, கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை, கொஞ்சும் கிளி, மணிக்குயில், மனதிலே ஒரு பாட்டு, கொண்டாட்டம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார், மலையாளப் படங்கள் சிலவற்றிலும் நடித்தார். மொத்தமாக 30 படங்கள் வரை நடித்தார்.
1990களின் இறுதியில் திரையுலகிலிருந்து விலகிய பிறகு, திருமணம் செய்துகொண்டு தற்போது மலேசியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கப் பல வாய்ப்புகள் வந்தபோதும், குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவற்றைத் தவிர்த்துவிட்டார்.