'அதோமுகம்' படக் கூட்டணியின் அடுத்த படம் 'மேரேஜ் ஸ்டோரி' : டீசர் வெளியீடு
ADDED : 19 minutes ago
இயக்குநர் சுனில் தேவ் இயக்கத்தில் நடிகர் எஸ்.பி. சித்தார்த் நடித்து 2024ல் வெளியான படம் 'அதோமுகம்'. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தற்போது இதே கூட்டணி 'மேரேஜ் ஸ்டோரி' படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தில் நாயகியாக ஷபானா ஷாஜகான் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ், புதுவை பூபாலன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 27ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.