உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்'

காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்'


'ஜூன்' (2019), 'மதுரம்' (2021) ஆகிய திரைப்படங்கள், ஓடிடி.,யில் வெளியான 'கேரளா கிரைம் பைல்ஸ்' முதல் மற்றும் 2ம் பாகம் ஆகியவற்றை இயக்கிய அஹம்மது கபீர், அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் புதிய படத்தை இயக்கியுள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்' (Many Many Happy Returns) என தலைப்பு வைத்துள்ளனர்.

அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் உறவுகளின் அழகையும், நமக்குப் பிடித்தமான மனிதர்கள் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படமாக 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்' உருவாகியுள்ளது.

இப்படத்தில் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், நாயகியாக லட்சுமி ஜோதிஷ் ஆகியோருடன் லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா மற்றும் ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 4ம் தேதி தமிழ், மலையாளம் மொழிகளில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !