உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் ‛சத்தியவான் சாவித்திரி' டிரைலர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் ‛சத்தியவான் சாவித்திரி' டிரைலர் வெளியானது

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சத்தியவான் சாவித்திரி படம் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. புதுமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் எழுதி இயக்கியுள்ள நீதிமன்றப் பின்னணி கொண்ட இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

வாய்ப்புகளின்றி தவிக்கும் வழக்கறிஞரான சாவித்திரிக்கு கட்டாயத் திருமணம் நடப்பதில் இருந்து டிரைலர் தொடங்குகிறது. தனது கணவர் மீது சாவித்திரிக்கு காதல் மலரும் வேளையில், ஒரு கொலை வழக்கில் தன் கணவருக்காகவே வாதாடும் சூழலுக்கு அவர் தள்ளப்படுகிறார். அந்த வழக்கில் சாவித்திரிக்கு எதிராக வாதாடும் பலம் வாய்ந்த வழக்கறிஞராக மிஷ்கின் களம் இறங்குகிறார். அனுபவமற்ற ஒரு வழக்கறிஞருக்கும், வலிமையான ஒரு மூத்த வழக்கறிஞருக்கும் இடையிலான மோதலாக இக்கதை அமைந்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கும் இப்படத்திற்கு மோகன் ராஜா, உமா தேவி மற்றும் இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் ஆதரவுடன், வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். எஸ். வைஷ்ணவி விவேக்சந்தர் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !