பாடகி ஸ்ரீநிஷா காதல் திருமணம்: பாடகர் சாம் விஷாலை மணக்கிறார்
ADDED : 3 hours ago
தனது 7 வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்த ஸ்ரீநிஷா, 'அவன் இவன்' படத்தில் இடம் பெற்ற 'ஒரு மலையோரம்' என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்போது உடன் பாடிய சாம் விஷாலை காதலித்தார். பல ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இசையால் இணைந்திருந்த இருவரும் தற்போது வாழ்க்கையிலும் இணைகிறார்கள். இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் (நவ.,11) சென்னையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. பாரம்பரிய உடையணிந்து இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், இவர்களின் திருமணத் தேதி முடிவாகவில்லை.