உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் குஷ்பு பெயரில் உருவாகியுள்ள படம்

மலையாளத்தில் குஷ்பு பெயரில் உருவாகியுள்ள படம்


நடிகை குஷ்பு சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில், அவருக்குக் கோயில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள். சாப்பிடும் இட்லிக்கு கூட 'குஷ்பு இட்லி' என்று பெயர் வைத்தார்கள். இந்த நிலையில் மலையாளத்தில் 'குஷ்பு' என்கிற பெயரிலேயே ஒரு படம் உருவாகியுள்ளது. ஆனால் இது நடிகை குஷ்பு பற்றிய படம் அல்ல; இது ஒரு ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சுஜன் அரோமல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால், கேரளாவில் ஒரு முறை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 'சில்' என்கிற பெயருடைய நாய் ஒன்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறது. நடிப்பதற்கென்றே பழக்கப்பட்ட நாய்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ஏற்கனவே சில வெளிவந்திருக்கின்றன. இந்த நிலையில் மீட்பு குழுக்களால் மீட்கப்பட்ட ஒரு நாய் திரைப்படத்தில் நடிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

இளந்திரயன் வேலந்தாவளம்
2026-11-06 19:32:49

குழ்பு என்ற hindi வார்த்தையின் தமிழாக்கம் வாசனை. மோப்பம்.. போஸ்டரில் நாயின் படம் இருப்பதால் இந்த பெயர் வைத்திருக்கலாம் ... மற்றபடி நடிகைக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை