உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை ஆல்பத்தில் அதிதி ஷங்கர்

இசை ஆல்பத்தில் அதிதி ஷங்கர்

இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி, விருமன் படத்தின் மூலம் சினிமா நடிகை ஆனார். தொடர்ந்து மாவீரன், நேசிப்பாயா, ஒன்ஸ்மோர் படங்களில் நடித்தார். சில படங்களில் பாடல்கள் பாடி உள்ளார். தற்போது அதிதி இசை ஆல்பத்தில் இணைந்துள்ளார்.

'ஜடா' பட இயக்குநர் குமரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இருவர் என்ற இசை ஆல்பத்தில் சூரஜ் சந்தோஷுடன் இணைந்து பாடல் பாடி உள்ளார். இந்த பாடலை விஜய்சேதுபதி எழுதியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். ஸ்டோன்புரூக் ஸ்டோன்புரூக் பிலிம்ஸ் சார்பில் வினோத் குமார், புஷ்பகலா மற்றும் குமரன் தயாரித்துள்ள இந்த இசைப் படைப்புக்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !