உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 3 முறை படமான அருணகிரிநாதர் வாழ்க்கை

பிளாஷ்பேக் : 3 முறை படமான அருணகிரிநாதர் வாழ்க்கை

முருகன் புகழ்பாடும் திருப்புகழை இயற்றியவர் அருணகிரிநாதர். இவரது வாழ்க்கை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. திரைப்படங்களின் வருகைக்கு பிறகு 1930ல் ஒரு முறையும், 1937ல் ஒரு முறையும் திரைப்படமானது. ஆனால் பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. மூன்றாவது முறையாக 1964ல் 'பாபா ஆர்ட் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்திற்காக, ரமணா இதனை இயக்கினார். பின்னணிப் பாடகர் டி. எம்.சவுந்தரராஜன் அருணகிரிநாதராக நடித்தார். பி.எஸ்.சரோஜா, அவரது சகோதரி 'ஆதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள். முக்கியமாக 'முத்தைத்தரு பத்தித் திருநகை...' என்ற பாடல். மிகக் கடினமான, நாவைக் குழறச் செய்யும் சொற்களைக் கொண்ட இந்தப் பாடலைப் பாடுவது சாதாரணமான காரியமல்ல. ஆனால், டி.எம்.எஸ் ஒரே டேக்கில் இதைப் பாடி வரலாறு படைத்தார். 'சண்முகப்பிரியா' ராகத்தில் அமைந்த இந்தப் பாடலுக்கு, அக்காலத்தின் முன்னணி இசையமைப்பாளர்களான ஜி.ராமநாதன் மற்றும் டி.ஆர்.பாப்பா ஆகியோர் இசையமைத்தனர்.

நடிகை சாரதா, எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர், நடனக் கலைஞரும் நடிகையுமான லட்சுமிராஜம் உள்ளிட்டோர் நடித்தனர். படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

கைப்புள்ள
2026-10-29 18:29:26

சூப்பர் படம் . பார்க்காதவர்கள் கட்டாயம் பாருங்கள்