வட அமெரிக்காவில் புதிய வசூல் சாதனை படைத்த 'ஜெயிலர் 2'
அமெரிக்கா மற்றும் கனடா இணைந்த வட அமெரிக்கா வசூலில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' படம் புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இதுவரையில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலைக் குவித்துள்ள படம், ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படங்களில் அதிக சூவலைக் குவித்துள்ள படம் என்று அதன் வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று இரவு இப்படம் வட அமெரிக்காவில் 7 மில்லியன் வசூலைக் குவித்ததாக முதலில் அறிவித்தார்கள். அடுத்த சில மணி நேரங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ள படம் என்று அப்டேட் செய்திருந்தார்கள்.
இதற்கு முந்தைய சாதனையாக ரஜினிகாந்த் நடித்து 2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படத்தின் முதல் பாகம் 7.2 மில்லியன் வசூலைப் பெற்றதே சாதனையாக இருந்தது. அதை 'ஜெயிலர் 2' வசூல் முறியடித்துள்ளது.
விஜய் நடித்த 'லியோ' படம் 6.9 மில்லியன் வசூலுடன் தற்போது 3வது இடத்திலும், பொன்னியின் செல்வன் 1' படம் 6.7 மில்லியன் வசூலுடன் 4வது இடத்திலும், 5.6 மில்லியன் வசூலுடன் விஜய் நடித்த 'லியோ' படமும் உள்ளது.
'ஜெயிலர் 2' படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதால் அதன் மொத்த வட அமெரிக்க வசூல மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.