வாசகர்கள் கருத்துகள் (1)
ஹொம்பாலே மதம் சார்ந்து இயங்குவதாக அதுவும் பிரகாஷ் ராஜ் தலையியேடு நிறைய வந்ததாகவும் ஒரு குற்றசாட்டு
'காந்தாரா, காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்கள் மூலம் 'கேஜிஎப்' படத்திற்குப் பிறகு கன்னட சினிமாவை அதிகம் பேச வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அவருக்கும் அந்தப் படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் ஏதோ ஒரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், ரிஷப் ஷெட்டி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார் ரிஷப். அதோடு ரிஷப் ஷெட்டி மியூசிக் நிறுவனத்தையும் ஆரம்பித்து 'ஹுப்பலி ஹன்டர்ஸ்' என்ற படத்தின் இசை உரிமையையும் வாங்கியுள்ளார்கள்.
தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக புதிய படம் ஒன்றை உருவாக்க உள்ளார் ரிஷப். அதற்காக புதிய முகங்களைத் தேடிப் போகிறது அவரது தயாரிப்பு நிறுவனம். முதலில் பெங்களூருவில் இதற்காக ஆடிஷன் நடத்தினார்கள். அடுத்து வட கர்நாடகாவில் உள்ள கலபுராகி (முன்னர் குல்பர்கா) நகரத்தில் ஆடிஷன் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தனது அடுத்த படம் என்னவென்பதை இன்னும் அறிவிக்காமல் இருக்கும் ரிஷப் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அவரே தயாரித்து, இயக்கி, நடிக்க உள்ளதாக சாண்டல்வுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஹொம்பாலே மதம் சார்ந்து இயங்குவதாக அதுவும் பிரகாஷ் ராஜ் தலையியேடு நிறைய வந்ததாகவும் ஒரு குற்றசாட்டு