உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : பிரபாஸின் முதல் ஜோடி யார் தெரியுமா?

பிளாஷ்பேக் : பிரபாஸின் முதல் ஜோடி யார் தெரியுமா?


இந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரபாஸ். தெலுங்கு நடிகராக இருந்தாலும், 'பாகுபலி' படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக வளர்ந்தவர். இந்தியாவில் உள்ள முன்னணி ஹீரோயின்களுடன் அவர் நடித்து வருகிறார். ஆனால் அவரது முதல் ஹீரோயின் யார் தெரியுமா?. விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார்.

சத்யராஜ் நடித்த 'ரிக்ஷா மாமா' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி முதன் முதலாக ஹீரோயினாக நடித்த படம் 'ஈஸ்வர்'. தெலுங்கில் உருவான இந்த படத்தில் தான் பிரபாசும் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்தார். அதன் பிறகு காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் ஸ்ரீதேவி நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !