உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே நாளில் மோதும் மம்முட்டி - துல்கர் சல்மான் படங்கள்

ஒரே நாளில் மோதும் மம்முட்டி - துல்கர் சல்மான் படங்கள்


நடிகர் தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்: சாப்டர் 1 ; உதிரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இதன் ரிலீஸ் நவம்பர் 20க்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், தெலுங்கில் தற்போது துல்கர் சல்மான், பவன் சாதிநேனி இயக்கத்தில் 'ஆகாசம்லோ ஒக்க தாரா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன், சுவாசிகா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படமும் நவம்பர் 20ம் தேதிதான் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எப்படி இருந்தாலும் தனுஷ் - மம்முட்டி இருப்பதாலும், அந்தப் பக்கம் துல்கர் சல்மான் படம் என்பதாலும், இரண்டு படங்களுமே தெலுங்கு மற்றும் தமிழிலும் சம முக்கியத்துவம் கொடுத்து ரிலீஸ் செய்யப்படும். இதனால் தந்தை - மகன் படங்கள் ஒரே நாளில் மோதும் சூழல் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !