உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சிபிராஜ்

பிறந்தநாளில் புதிய தயாரிப்பு நிறுவனம் துவங்கிய சிபிராஜ்

நடிகர் சிபிராஜ் தனது பிறந்தநாளான இன்று (அக்., 6) அண்டர்டாக் பிலிம்ஸ் (Underdog Films) எனும் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'புரொடக்ஷன் நம்பர் 1' படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'ஜீப்ரா' படத்தை இயக்கிய ஈஷ்வர் கார்த்திக் இதை இயக்குகிறார்.

சிபிராஜ் கதாநாயகனாக நடிப்பதுடன், அவரே தயாரித்தும் வருகிறார். இதன் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் சிபிராஜ். படத்தின் கதை, ஜானர் மற்றும் பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விரைவில் படக்குழுவினரின் அதுபற்றிய விவரங்களை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !