உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு மாணவன் இதுதான் 'ஹைக்கூ' படக்கதை

பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஒரு மாணவன் இதுதான் 'ஹைக்கூ' படக்கதை


யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன், பெமினா ஸ்ரீதேவி நடிக்கும் படம் 'ஹைக்கூ' அக்டோபர் 23ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே படிக்கும் ஒரு பெண்கள் கல்லூரியில் ஹீரோ ஏகன் ஓராண்டு படிக்கிறார். எதனால் படிக்கிறார்? அதற்கான பின்னணி என்ன? அப்படி படிக்க முடியுமா என்பதையும் காதலின் இன்னொரு பக்கத்தையும் சொல்லும் படம் 'ஹைக்கூ'.

'ஜோ' படத்தை இயக்கிய ஹரி இந்த படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார், சித்து இசையமைத்துள்ளார். பெண்கள் கல்லூரி போர்ஷன் 25 நிமிடங்கள் வந்தாலும் முக்கியமானதாக இருக்கும். 'அலைபாயுதே, ரிதம்' போல் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாக இருக்கும் என்கிறது படக்குழு. கோவை, சென்னை மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 'கோழி பண்ணை செல்லத்துரை' படத்தில் நடித்த ஏகன் ஹீரோ; மலையாளத்தில் 'மின்னல் முரளி' உள்ளிட்ட படங்களில் நடித்த பெமினா ஹீரோயின். கூடவே மலையாள நடிகை ஸ்ரீதேவி நடித்துள்ளார். உலகம் முழுக்க அக்டோபர் 23ம் தேதி இந்த படம் 700 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

ரிலீசுக்கு முன்பே ஓடிடி, சாட்டிலைட், இசை உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. காரணம் கதை அமைப்பு அப்படி என்கிறார்கள் பட குழுவினர். ஹீரோவின் 19 வயது முதல் 26 வயதான வாழ்க்கையை இந்த படம் சொல்கிறது. ஹைக்கூ என்றால் மூன்று வரி கவிதை. ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள் சுற்றி கதை நடப்பதால் இந்த தலைப்பு என்றும் தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !