வதந்தியில் சிக்கிய அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் படம்!
தற்போது 'ராக்கா' படத்தில் பிசியாக நடித்து வரும் அல்லு அர்ஜுனூ, தனது 23வது படத்திற்காகத் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். இந்தப்படம் திட்டமிட்டபடி நிச்சயம் தொடங்கும். இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றன. அல்லு அர்ஜூன் ராக்கா படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன், படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.
'ஏஏ 23' படத்திற்காக அனிருத் இசையமைத்த தீம் இசை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கூட தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் இந்த இசையைப் பயன்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த படத்திற்காக பல மாதங்களாக காத்திருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது வேறு ஒரு நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலாகி வந்தது.
ஆனால் அந்த செய்தியை மறுத்துள்ளது மைத்ரி மூவி மேக்கர்ஸ். அதில், ராக்கா படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏஏ 23வது படத்தின் படப்பிடிப்பு தாமதமாகியுள்ளது. மற்றபடி இந்த படம் கண்டிப்பாக நடக்கும். தொடர்ந்து ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது என்று அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.