ஜார்ஜியாவிலிருந்து 45 நிமிடங்கள் பயணித்து வந்து குரல் கொடுத்த மோகன்லால்; ராஜமவுலி நெகிழ்ச்சி
ADDED : 1 days ago
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் 'ஆபரேஷன் கங்கா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் பாலிவுட் நடிகரான அர்ஜூன் ராம்பால் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பஹத் பாசில் நடிப்பில், எஸ்.எஸ். ராஜமவுலியின் மகன் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரிப்பில், சஷாங்க் இயக்கியிருக்கும் 'டோண்ட் டிரபுள் த டிரபுள்' படம் விரைவில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் கேரள புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ராஜமவுலி, ஜார்ஜியாவில் தனது படப்பிடிப்புத் தளத்தில் இருந்து 45 நிமிடங்கள் பயணித்து வந்து, மோகன்லால் இந்தப் படத்திற்கு ஒரு முக்கியமான வாய்ஸ் ஓவர் ஒன்றை கொடுத்துள்ளார் என ஒரு சுவாரஸ்யமான தகவலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.