உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செழியனின் 'காகிதமலர்' சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு

செழியனின் 'காகிதமலர்' சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு


தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர், இயக்குனர் செழியன், சமீபத்தில் திடீரென காலமானார். இந்த நிலையில், இறப்பதற்கு முன் அவர் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய 'காகிதமலர்' திரைப்படம், 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் 'ஆசியன் பியூச்சர்' (Asian Future) பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செழியனின் மனைவி பிரேமா வெளியிட்ட அறிக்கையில், ''என் கணவர் இயக்கிய 'காகிதமலர்' திரைப்படம் டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் உலக பிரீமியரில் இரண்டு காட்சிகளாக திரையிடப்படுவதற்கும், போட்டிப் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சுயாதீன திரைப்படம் (Independent Movie) தேர்வு செய்யப்பட்டிருப்பது, இந்தியத் திரைப்படத் துறைக்கும், தமிழ் திரைப்படத் துறைக்கும் பெருமை சேர்க்கும் செய்தி. இதனை படத்தின் தயாரிப்பாளர் என்ற வகையில் பெருமையுடனும், நன்றியுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தப் படத்தில் பணிபுரிந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசை தபஸ் நாயக் ஆகியோருக்கும் செழியனின் உதவியாளர்கள் மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், ஆர்.பி.ராஜா, பேச்சியப்பன், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன், அறிமுக நடிகை ஜனனி செண்பகா ஆகியோருக்கும் நன்றி'' என அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !