உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த மனோரமா

பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த மனோரமா


ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ஆச்சி மனோரமா பெரும்பாலும் காமெடியாகவே நடித்துள்ளார். பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் அவர் நாயகியாகவும் நடித்துள்ளார். அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்த ஒரே படம் 'கொஞ்சும் குமரி'.

1963ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை. ஜி.விஸ்வநாதன் இயக்கி இருந்தார். ஆர்.எஸ்.மனோகர், ஏ.கருணாநிதி ,கே. கே.சவுந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். 'ஜங்கிள் குயின்' என்ற படத்தை தழுவி மார்டன் தியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்தது.

காட்டு வாசிகளின் தலைவி அல்லியாக மனோரமா நடித்திருந்தார். அவர் தன் மக்களுக்கு ஆபத்து வரும்போது துப்பாக்கி ஏந்தி சண்டைபோடுவார். காட்டுக்குள் வழி தவறி வந்த நாயகன் மனோகரனை காப்பாற்றி அவரையே காதலிப்பார். அவருக்கு ஒரு பிரச்சினை வரும்போது அதையும் மனோரமா எதிர்த்து நின்று சமாளிப்பார் இப்படி போகும் கதை.

ஆரம்பத்தில் மனோரமாவை ஆக்ஷன் ஹீரோயினாக மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் படம் தடுமாறியது. அதன் பிறகு படத்தில் இடம்பெற்ற புதுமையான சண்டை காட்சிகள், மனோரமாவின் வித்தியாசமான நடிப்பால் பிக்அப் ஆகி 50 நாட்கள் வரை ஓடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !