குறுகிய நாட்களில் ஓடிடி-க்கு வந்த கார்த்தியின் இரண்டு படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. அவருக்கு இந்த 2026ம் ஆண்டு ராசியாக அமையவில்லை. அவர் நடித்து இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த 'வா வாத்தியார்', கடந்த மாதம் வெளிவந்த 'சர்தார் 2' ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியை அடைந்தன. இரண்டு படங்களுமே இரண்டு நாட்கள் கூட தியேட்டர்களில் தாக்குப் பிடித்து ஓடவில்லை.
கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி வெளியான 'சர்தார் 2' படம் மூன்றே வாரங்களில் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஜனவரி 14ல் வெளியான 'வா வாத்தியார்' படம் ஜனவரி 28ம் தேதியன்று இரண்டே வாரங்களில் வெளியானது.
தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகும். ஆனால், இந்த இரண்டு படங்களைப் பொறுத்தவரையில் அதை விட சீக்கிரமே வெளியிட்டுவிட்டார்கள். படத்தின் தோல்வி, பெரிய நஷ்டம் என்பதால் இதைப் பற்றி யாரும் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. வெற்றி பெற்ற படமாக இருந்திருந்தால் இதற்கு கண்டிப்பாக எதிர்ப்பு வந்திருக்கும்.