உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனி ஆளாக வாழ்க்கை... முடிவுக்கு வந்த நடிகை

தனி ஆளாக வாழ்க்கை... முடிவுக்கு வந்த நடிகை


ஏற்கனவே, ஒரு தயாரிப்பாளருடனான திருமணம் தடைப்பட்ட நிலையில், மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து யோசிக்காமல் இருந்து வந்த, மூனுஷா நடிகை, தற்போது தளபதி நடிகருடன் இணைத்து, தன் மீது தொடர்ந்து அவதுாறுகள் வருவதால், யாராவது தொழிலதிபரைத் திருமணம் செய்து, செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்.

அதற்காக, தன் அம்மாவிடம் சொல்லி, தன் ஜாதகத்தை ஒரு மலையாள ஜோதிடரிடம் கொடுத்துக் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது, நடிகைக்கு திருமண யோகமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒருவேளை கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாலும், அது ஓரிரு ஆண்டுகளிலேயே முறிந்துவிடும்; அந்த அளவுக்கு திருமண யோகம் இல்லாத ஜாதகமாக இருப்பதாக ஜோதிடர் கூறிவிட்டார்.

இதனால், 'ரிஸ்க்' எடுக்க விரும்பாமல், 'இப்படியே தனி ஆளாக வாழ்க்கையை ஓட்டிவிடலாம்...' என்ற முடிவுக்கு வந்துவிட்டார், மூனுஷா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

Naga Subramanian, Kolkatta
2026-09-30 07:37:33

திரையில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.


Anantharaman Srinivasan, chennai
2026-09-28 20:47:49

நித்தியானந்தா குழுவில் சேர்ந்து கைலாசாவில் ஆன்மீக பணியில் ஈடுபடலாம்.


முருகன்
2026-09-27 20:56:18

யாருக்காக இந்த செய்தி ஊருக்காக இருக்கும்


anbariv
2026-09-27 18:30:55

nambitom