உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரன்பீர் கபூர் - சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி

ரன்பீர் கபூர் - சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி


'அனிமல்' படத்தை அடுத்து 'ராமாயணா' மற்றும் 'லவ் அண்ட் வார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர். இதில், லவ் அண்ட் வார் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்க ஆலியா பட் நாயகியாக நடிக்கிறார். விக்கி கவுசல் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இப்படக்குழுவினர் படத்தின் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி, லவ் அண்ட் வார் படம் ஜனவரி 21, 2027 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

ரன்பீர் கபூரின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அவர் முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளிப்பதுடன், அவரது கதாபாத்திரம் குறித்த முதல் பார்வையும் கிடைத்துள்ளது. மேலும், இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை இந்த காதல் காவியத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'சாவரியா' படத்திற்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ரன்பீர் கபூர் கூட்டணி மீண்டும் இணையும் படமாக லவ் அண்ட் வார் அமைந்துள்ளது. முன்னதாக, ஆலியா பட், பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !