உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி பாரடைஸ்' முதல் 'சிக்மா, ஜெயிலர்-2' வரை கைப்பற்றும் மைத்ரி மூவி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்!

'தி பாரடைஸ்' முதல் 'சிக்மா, ஜெயிலர்-2' வரை கைப்பற்றும் மைத்ரி மூவி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்!


நானி நடித்த 'தி பாரடைஸ்' படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், மைத்ரி மூவி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எல்.எல்.பி நிறுவனம் அடுத்தடுத்த வாரங்களில் பல வெளியீடுகளைக் கைவசம் வைத்துள்ளது. அடுத்து, சந்தீப் கிஷன் நடிக்கும் சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாவதால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை மைத்ரி நிறுவனம் பெற்றுள்ளது.

அதையடுத்து ஒரு வாரம் கழித்து, அக்டோபர் 9 அன்று வெங்கடேஷ் மற்றும் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ஆதர்ஷ குடும்பம் வெளியாகவுள்ளது. இந்த வரிசையில் இது மற்றொரு பெரிய வெளியீடாகும். மேலும், பண்டிகைக் காலத்தில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர்-2 படம் அக்டோபர் 15ம் தேதி அன்று வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், மைத்ரியின் வெளியீட்டுப் பட்டியலில் மற்றொரு பெரிய படமாகச் சேர்ந்துள்ளது. 'தி பாரடைஸ், சிக்மா, ஆதர்ஷ குடும்பம்' மற்றும் 'ஜெயிலர்-2' ஆகிய படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகவுள்ளதால், மைத்ரி மூவி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தடுத்த வாரங்கள் மிகவும் பரபரப்பானதாக இருக்கப்போகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !