உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஸ்மாஷ்'

இந்தியா, ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் 'ஸ்மாஷ்'

இரண்டு வெவ்வேறு நாடுகளில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து கூட்டாக தயரிக்கும் படங்கள் முன்பு அடிக்கடி வெளியாகும். இப்போது அது அரிதாகி விட்டது. இந்த நிலையில் தற்போது இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் ஒரு தமிழ் படம் தயாராகிறது.

'டிமாண்டி காலனி 2ம் பாகத்தை' தயாரித்த ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் காசி விஸ்வநாதனும், ரஷ்யாவை சேர்ந்த சமீனா பிலிம் கம்பெனி சார்பில் எகத்தெரினா கோலுபேவா ஆகியோர் இணைந்து 'ஸ்மாஷ்' என்ற படத்தை தயாரிக்கிறார்கள்.

இது தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு உருவாகும் படம்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புதுடில்லியில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ரஷ்ய கலாச்சாரத் துறை அமைச்சர் ஸ்வெட்லானா சுப்ஷேவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !