உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி - சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு

என் அம்மா, முதல்வரான என் அப்பாவுக்கு நன்றி - சிக்மா பட விழாவில் ஜேசன் சஞ்சய் பேச்சு

சென்னை : என் அம்மாவுக்கு நன்றி, என்னுடைய அப்பா இன்னைக்கு முதல்வர்; அவருக்கு நன்றி என முதல்வர் விஜயின் மகனான இயக்குனர் ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.

முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி உள்ள முதல் படம் ‛சிக்மா'. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாகி உள்ளன.

சென்னையில் நடந்த சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஜேசன் சஞ்சய் பேசியதாவது, ‛‛எல்லோருடைய வாழ்விலும் கண்டிப்பாக ஒரு சிக்மா நிகழ்வு நடந்திருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு தேவை, பிரச்னை இருக்கும். அப்ப அவுங்க எடுத்த ஒரு முடிவால் மொத்த வாழ்க்கையே மாறும். அப்படிப்பட்ட பயணம் தான் இந்த சிக்மா. எனக்கு இது முதல்படம், ரொம்ப ஸ்பெஷலானது மற்றும் மறக்க முடியாதது. அதைத்தாண்டி இந்த பயணத்தில் என்னுடன் பயணித்த அனைவரும் இன்னும் மறக்க முடியாத பயணமாக மாற்றினாங்க.

அம்மா, அப்பாவிற்கு நன்றி
நண்பர்கள், குடும்பத்தினர், என் அம்மாவுக்கு நன்றி. என்னுடைய அப்பா இன்னைக்கு முதல்வர், அவருக்கு நன்றி. என் அருமை தங்கை திவ்யாவுக்கும் நன்றி. சிக்மா படம் அக்டோபர் 2ம் தேதி ரீலிஸ் ஆக போகிறது, அனைவரும் ஆதரவு தாங்க'' என்றார்.

அப்பா ஆர்வமாக உள்ளார்
முன்னதாக ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேசன், ‛‛என் அப்பா முதல்வர் ஆனது எனக்கும், அவரைச் சுற்றியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. சிக்மா பட வெளியீட்டிற்காக அவர் காத்திருக்கிறார். முதல்வராக அவருக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளன. இருந்தாலும் நான் என்ன செய்திருக்கிறேன் என்பதை பார்க்க அவர் ஆர்வமாக இருக்கிறார்.

நடிப்பது பற்றி ஆலோசிக்கிறேன்
சிக்மா ஒரு கமர்ஷியல் படம், ஜாலியான படமாக இருக்கும். இப்போதைக்கு இந்த படத்தை வெளியிடும் பணிகளில் தான் என் கவனம் உள்ளது. சிக்மா வெளியான பிறகு நடிப்பது பற்றி நிச்சயம் ஆலோசிக்கிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !