பெத்லகேம் குடும்ப யூனிட் படத்தின் வெற்றி ரகசியத்தை பகிர்ந்த பஹத் பாசில்!
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ல் திரைக்கு வந்த படம் பெத்லகேம் குடும்ப யூனிட். மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது. பிரேமலு புகழ் கிரீஷ் ஏ.டி இயக்கியுள்ள இப்படத்தை பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் பஹத் பாசில் தயாரித்துள்ளார்.
இந்தப் படம் எவ்வாறு இவ்வளவு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது என்பது குறித்து பஹத் பாசில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், நல்ல மற்றும் புதுமையான கதையம்சம் உள்ள படங்கள் எப்போதும் வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன். இதன் முழு பெருமையும் இயக்குநர் கிரீஷ் ஏ.டி மற்றும் நிவின் பாலி உட்பட முழு படக்குழுவையே சாரும். அற்புதமான, நேர்மையான திரைக்கதை, வயது வித்தியாசக் காதல், காட்சிகள் அமைக்கப்பட்ட விதம், நகைச்சுவை என அனைத்துமே மிகக் கச்சிதமாக அமைந்தன. மேலும், ஓணம் பண்டிகை விடுமுறை காலத்தில் படத்திற்கு சரியான ரிலீஸ் தேதியும் கிடைத்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தயாரிப்பாளராக சரியான திரைக்கதையையும், விளம்பரப்படுத்துதலையும் கொண்டு சேர்ப்பதே எனது பணி என நம்புகிறேன். நான் எப்போதும் நல்ல கதைகளையும் புதிய திறமைகளையுமே தேடிக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான நேரங்களில் அது எனக்கு கை கொடுத்துள்ளது எனக் கூறியுள்ள பஹத் பாசில், தற்போது அக்டோபர் 2ம் தேதி அன்று வெளியாகவுள்ள தனது தெலுங்கு திரைப்படமான டோன்ட் டிரபுள் தி டிரபுள் படத்தின் ரிலீஸுக்கு தயாராகி வருகிறார்.