ரணபாலி படத்தின் 130 நாள் படப்பிடிப்பு நிறைவு
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடிக்கும் முதல் படம் ரணபாலி. இந்த சரித்திர படத்தை ராகுல் சாங்கிருத்யாயன் இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் 130 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த செய்தியை ஒரு வீடியோ மூலம் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரணபாலி படம் போஸ்ட், புரொடக்ஷன் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. திட்டமிட்டபடி அவுட்புட்டை வழங்க குழுவினர் இறுதிப் பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், படம் அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான, ஏண்டய்யா சாமி படத்தின் முழுப் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர்கள் அஜய், அதுல் இப்படத்திற்கு இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.