அஜித்துக்கு 'மினியேச்சர்' ரேஸ் கார் பரிசளித்த முதல்வர் விஜய்
கார் பந்தய பிரியர்களுக்காக 'லீ மான்ஸ்' கோப்பை 2016ல் துவங்கியது. இது அதிவேக 'பார்முலா-1' பந்தயத்தில் இருந்து மாறுபட்டது. 'பார்முலா-1'ல் ஒற்றை 'சீட்' மட்டும் இருக்கும்.
ஆனால், 'லீ மான்ஸ்' கோப்பை பந்தயத்தில் ஒரு காரை இரு வீரர்கள் பகிர்ந்துகொண்டு ஓட்ட வேண்டும். வீரர்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கும். கடினமான நீண்ட நேர பந்தயமாக இருக்கும்.
2026 சீசனுக்கான 'லீ மான்ஸ்' கோப்பைக்கான பந்தயம் ஏற்கனவே ஸ்பெயின், பிரான்ஸ் (2 சர்க்கியூட்), பெல்ஜியத்தில் நான்கு சுற்றுகள் நடந்தன. ஐந்தாவது சுற்று பிரிட்டனின் பிரபலமான சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்கியுட்டில் நடந்தது. இதை தமிழக முதல்வர் விஜய், கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார், எல்.எம்.பி3 புரோ/ஏ.எம் பிரிவில் பங்கேற்றார். இவருடன் பிரான்சின் ரோமைன் வோஸ்னியாக் இணைந்து காரை ஓட்டினார். சுமார் 2 மணி நேரம் பந்தயம் நடந்தது. இதில் அஜித் குழு (ரெட் ஆன்ட்) 38வது இடத்தில் நிறைவு செய்தது.
போட்டி முடிந்ததும் முதல்வர் விஜய், நடிகர் அஜித் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக முதல்வர் விஜய், அஜித்துக்கு அவரது காரின் மினியேச்சர் மாடலை பரிசாக அளித்தார். அதில், 'என் அன்பான சகோதரர் அஜித்துக்கு.. பிரியமுடன் விஜய்' எனக் குறிப்பிட்டுள்ளார். பதிலுக்கு அஜித்தும், அவரது ரேஸ் ஹெல்மேட் ஒன்றை விஜய்க்கு பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.