உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உடை பற்றிய விமர்சனம்: ஐஸ்வர்யா லக்ஷ்மி காட்டம்

உடை பற்றிய விமர்சனம்: ஐஸ்வர்யா லக்ஷ்மி காட்டம்


மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, தமிழில் 'மாமன், கட்டா குஸ்தி' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் அணிந்திருந்த உடை குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி தெரிவித்ததாவது:

அங்கிருந்தவர்கள் என் முகத்தில் கவனம் செலுத்தவில்லை. எனக்குச் சங்கடமாக இருந்தது; அப்படிச் சங்கடம் ஏற்படும்போது நம் உடல் மொழியும் மாறிவிடும். எனது தனிப்பட்ட எல்லைகள் மீறப்பட்டதாக நான் உணர்ந்தேன். பண்பாடு என்பது ஒரு பெண்ணின் உடல் அமைப்பிலோ அல்லது அவரது ஆடையிலோ மட்டும் இல்லை, நாம் பிறரிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் அது இருக்கிறது. பெண்களைப் பற்றித் தவறான கருத்துகளைச் சொல்பவர்களை யாரும் பெரிதாகக் கேள்வி கேட்பதில்லை. ஆனால், ஒரு பெண் எப்போதும் தனது மார்பகப் பகுதி மற்றும் ஆடை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு எதிரான கேலிகள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்திற்கு நான் அதைச் சிரித்துக்கொண்டே கடந்து சென்றேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல, அது எத்தகைய விவாதமாக உருவெடுத்தது என்பதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். நமது நாட்டின் ஜி.டி.பி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) குறித்தோ அல்லது கைவிடப்படும் முதியோர்கள் குறித்தோ நாம் ஏன் விவாதிக்கக் கூடாது? எனது உடல் பற்றி ஏன் இவ்வளவு தீவிரமான விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்?'' எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Anand, chennai
2026-09-15 13:00:59

இவரும் தெறமையை நன்றாக காட்ட ஆரம்பித்துவிட்டார்.