'ராமாயணா': ராமர், சீதா முதல் பார்வை வெளியீடு
ADDED : 6 hours ago
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.
மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இப்படத்தின் ராமர், சீதா கதாபாத்திரங்களின் அறிமுகப் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு வனத்தில் சீதா அமர்ந்திருக்க, அவருக்கு ராமர் பூச்சூடும் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
மேலும், படத்தின் 'ஜெய் ஜெய் ராம்' என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான், ஹன் ஜிம்மர் இசையில் குமார் விஷ்வாஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷ்ரேயா கோஷல், அர்ஜித் சிங் பாடியுள்ளனர்.
பிரமாண்டமான அரங்கு, காட்சி உருவாக்கம் என பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.