உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு!

பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு!


'வணக்கம் சென்னை, காளி, காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களை இயக்கியவர் கிருத்திகா உதயநிதி. அதோடு 'பேப்பர் ராக்கெட்' என்ற வெப்சீரியலும் இயக்கியுள்ளார். விரைவில் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தையும் அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் அவ்வப்போது சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பதிவிட்டு வரும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி, தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், 'இந்த பூமியில் இருந்து வெளியேறி வேற்று கிரகத்துக்கு செல்ல என்ன வழி' என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது இந்த பூமியை விட்டு சென்று விட வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார். மிகவும் விரக்தியுடன் அவர் போட்டுள்ள இந்த பதிவை அடுத்து அதற்கான காரணம் கேட்டு ஏராளமான கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !