உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலய்யா படத்திற்கு கவின் பட தலைப்பு

பாலய்யா படத்திற்கு கவின் பட தலைப்பு


கவின் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'டாடா'. நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்கி இருந்தார். தற்போது இந்த படத்தின் தலைப்பு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் என்.டி.பாலகிருஷ்ணா நடித்து வரும் அவரது 111வது படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கிவருகிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார், அரவிந்த் காஷ்யப் ஒளிப்பதிவு செய்கிறார். விருத்தி புரொடக்ஷன் சார்பில் வெங்கட சதிஷ் கிலாரு தயாரிக்கிறார்.

டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கவின் நடித்த 'டாடா' தலைப்பின் பொருள் தந்தை என்பதை குறித்தது. இந்த படத்தின் பொருள் 'தாதாக்களின் தாதா' என்ற பொருளை குறிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !