உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' ஓடிடி உரிமை குறித்து வரும் தகவல் உண்மையா? : அதிர்ச்சியில் திரையுலகம்

'டாக்சிக்' ஓடிடி உரிமை குறித்து வரும் தகவல் உண்மையா? : அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமா உலகில் இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் கன்னட சினிமாவான 'டாக்சிக்' படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய தோல்வியை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. முதல் நாள் வசூலை மட்டும் அறிவித்த தயாரிப்பு நிறுவனம் அதற்குப் பின் அது குறித்த அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக இதன் ஓடிடி உரிமை குறித்து வெளியாகும் தகவல்கள் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக இது போன்ற பெரிய படங்கள் வெளியாவதற்கு முன்பே ஓடிடி உரிமைக்கான ஒப்பந்தத்தை முடித்துவிடுவார்கள். ஆனால், 'டாக்சிக்' ஓடிடி உரிமை குறித்து தற்போது இரு வேறு விதமான தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று பட வெளியீட்டிற்கு முன்பாகவே 150 கோடி ரூபாய்க்கு விலை பேசியதாம். ஆனால், தயாரிப்பு நிறுவனம் 200 கோடி வரை கேட்டார்களாம். அதனால், அந்த நிறுவனம் பின்வாங்கி விட்டது என்கிறார்கள்.

தற்போது படத்தின் தோல்விக்குப் பிறகு வெறும் 30 கோடிக்கு மட்டும் ஒரு ஓடிடி நிறுவனம் கேட்டுள்ளதாம். 200 கோடியை எதிர்பார்த்தவர்களுக்கு 30 கோடிக்கு மட்டுமே அதன் உரிமை வந்து நின்றுவிட்டுள்ளது என்று சொல்கிறார்கள். 200 கோடி எங்கே, 30 கோடி எங்கே என இதைப் பற்றிக் கேள்விப்பட்ட திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

எந்த ஓடிடி நிறுவனம், எவ்வளவு விலைக்கு இந்தப் படத்தைப் பேசியுள்ளது, அல்லது ஏற்கெனவே வாங்கப்பட்டுள்ளதா போன்ற தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !