தெலுங்கில் நான் தேடிப்போகிறேன்... தமிழிலோ என்னை தேடி வருகிறது. ; நடிகர் சந்தீப் கிஷன்
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பேலன்ஸ் செய்து நடித்து வருகிறார் நடிகர் சந்தீப் கிஷன். முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தில் இவர்தான் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் படங்களை தேர்வு செய்யும் விதம் குறித்து ஜாலியாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார் சந்தீப் கிஷன்.
அதாவது, தெலுங்கில் நானே இயக்குனரை கண்டுபிடித்து, பல மாதங்கள் கதையை மெருகேற்றி, பின்னர் அந்த கதையின் மீது நம்பிக்கை உள்ள தயாரிப்பாளர்களை தேடிப்பிடித்து படங்களை உருவாக்குகிறேன். அதே சமயம் தமிழ் திரை உலகில் நான் நடித்த 'மாநகரம்' திரைப்படத்தைத் தவிர, அதற்குப் பிறகு நடித்த மற்ற அனைத்து படங்களும் தன்னிச்சையாக என்னை தேடி வந்த வாய்ப்புகள் தான்.. தமிழில் எந்த ஒரு திட்டமிடலுடனும் நான் நுழையவில்லை. கிடைத்த படங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ரசித்து செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.