உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா

கணவருடன் ஷூட்டிங்கை முடித்த கையோடு அவரது தம்பி பட புரமோஷனில் பங்கேற்ற ராஷ்மிகா


நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் தொடர்பாக சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். தற்போது மீண்டும் தனது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த நிலையில் தனது கணவர் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள 'எபிக்' என்கிற படத்தின் டிரைலர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு, அவரையும் படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார் ராஷ்மிகா மந்தனா.

காலையில் தன் கணவருடன் தாங்கள் நடிக்கும் பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டு, அங்கிருந்து நேரடியாக இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொள்வதாகக் கூறிய ராஷ்மிகா மந்தனா, எப்போதுமே ஆனந்த் தேவரகொண்டாவிற்கு தனது முழு ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக அதாவது அவர் விஜய் தேவரகொண்டாவுடன் காதல் வயப்பட்டுள்ளாரா என்பது போன்ற செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வந்த சமயத்திலேயே, ஆனந்த் தேவரகொண்டா நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்து மறைமுகமாக விஜய் தேவரகொண்டாவுடனான காதலை ராஷ்மிகா உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !