டிஜே பிளாக்கிற்கு திருமணம்
ADDED : 15 hours ago
விஜய் டிவியின் நட்சத்திர டினே சுதன் குமார் என்ற இயற்பெயர் கொண்ட டி.ஜே.பிளாக். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் போன்ற விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் டி.ஜே-வாக முக்கியப் பங்காற்றி வருகிறார். இதனைத் தாண்டி இசையமைப்பாளர்கள் பலரின் மியூசிக் கான்சர்ட்களில் இவர் பங்காற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். ரம்யா என்பவருடன் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் என்றென்றும் பற்றிக்கொள்ள... எனக்கு மிகவும் பிடித்தமான மனிதருடன் எனது வாழ்வின் மிகச்சிறந்த புதிய பயணத்தைத் தொடங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.