உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சர்தார் 2 கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் : சாம் சி.எஸ்

சர்தார் 2 கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் : சாம் சி.எஸ்

கார்த்தி, பி.எஸ்.மித்ரன் கூட்டணி 2022ல் வெளியான சர்தார் படத்தில் இணைந்தனர். அந்த முதல் படமே 100 கோடி வசூலித்த நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்துள்ளார்கள். கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாதன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த சர்தார் 2 படத்தின் மூலம் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக தனது 100-வது படம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளார்.

இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‛‛நானும், மித்ரனும் சினிமா விஷயத்தில் ஒரே மாதிரியான ரசனையைப் பகிர்ந்து கொள்வதாகவும், அதுவே தங்களின் கூட்டணியை சிறப்பு வாய்ந்ததாக மாற்றுவதாகவும், இப்படத்தின் 90 சதவீத பகுதிகள் தங்களது சொந்த விருப்பபடியே உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீதம் மட்டுமே ரசிகர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சர்தார் 2 கதை வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்டுள்ளது. இந்த படம் கார்த்தியின் திரையுலகப் பயணத்தில் ஒரு மிகச்சிறந்த மைல்கல்லாக அமையும்'' என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !