உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்'

ஒரே வாரத்தில் காணாமல் போன 'மகுடம்'

விஷாலின் இயக்குனர் பதவி உயர்வு இப்படி தோல்வியில் முடியும் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். விஷால் இயக்குராக புதிய பொறுப்பேற்று இயக்கிய 'மகுடம்' படம் கடந்த வாரம் வெளியானது.

இதுவரை வந்த விஷால் படங்களிலேயே மிகப் பெரும் தோல்வி என்று சொல்லும் அளவிற்கு இப்படம் தோல்வியடைந்தது. மொத்தமாக 2 கோடி கூட வசூலிக்கவில்லை என்றுதான் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் ஏறக்குறைய வெளியான எல்லா தியேட்டர்களிலும் படம் தூக்கப்பட்டுவிட்டது. இன்று நிறைய படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரமும் படங்கள் வருகின்றன.

'மகுடம்' படத்துடன் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 150 கோடியைக் கடந்து ஓடி வருகிறது.

'மகுடம்' படத்திற்கு முதலில் ரவி அரசு இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அவரைத் தூக்கிவிட்டு, இந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை தானே ஏற்றார் விஷால்.

இதே போலத்தான் 'துப்பறிவாளன் 2' படத்திலும் அதன் இயக்குனர் மிஷ்கின், மற்றும் நாயகன் விஷால் இடையே சண்டை வந்து படமே நின்று போனது.

இவை குறித்து சமூக வலைத்தளங்களிலும் பல கமெண்ட்கள் இடம் பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !