உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பறந்து போனது ‛புதிய பறவை' : சவுகார் ஜானகியின் திரை வாழ்க்கை

பறந்து போனது ‛புதிய பறவை' : சவுகார் ஜானகியின் திரை வாழ்க்கை

‛புதிய பறவை' படத்தில் ‛பார்த்த ஞாபம் இல்லையோ....' என்ற பாடலுக்கு ஆடிப், பாடி நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. வயது முதிர்வால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று(ஆக., 21) காலமானார். புதிய பறவையில் சிறகடித்த இந்த பறவை இப்போது இந்த பூலோகத்தை விட்டு பறந்து சென்றுவிட்டது. அவரது திரை வாழ்க்கையை பார்க்கலம்.



ஜானகி - சவுகார் ஜானகி ஆனது எப்படி

ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் படித்த பாரம்பரியமிக்க ஒரு குடும்பத்தில் பிறந்தவர் சவுகார் ஜானகி. இவரது நிஜப்பெயர் ஜானகி. 1931ல் டிச., 12ம் தேதி பிறந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். 1950ல் தெலுங்கு தயாரிப்பாளர் பிஎன் ரெட்டி தயாரித்து, எல்வி பிரசாத்தின் இயக்கத்தில் வெளியான ‛சவுகார்' படம் தான் இவரது முதல் படமாகும். இந்த படம் வெற்றி படமாக அமைய ஜானகி என்ற இவரது பெயருக்கு முன்னால் சவுகார் என்ற பெயரும் ஒட்டிக் கொள்ள பின்னர் சவுகார் ஜானகி என கொண்டாடப்பட்டார்.



சினிமாவில் நடிக்க வரும் போதே இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருந்தது. அதன்பின் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கின. திருமணம், குழந்தை என பார்க்கவில்லை. தொடர்ந்து படங்களில் நடிக்க துவங்கினார். 1952ல் டிஆர் சுந்தரம் இயக்கி, மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'வளையாபதி' என்ற படம் தான் தமிழில் இவரது முதல் படமாக அமைந்தது. தொடர்ந்து ‛‛பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி'' என பல வெற்றி படங்களில் நடித்தார்.

லெஜண்ட் நடிகர்கள்



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி சில ஹிந்தி படங்களிலும் ஏறக்குறைய 400 படங்களில் நடித்துள்ளார். என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ராஜ்குமார், பிரேம் நசீர் என அன்றைய அனைத்து கதாநாயகர்களுடனும் நடித்த பெருமைமிக்கவர்.

1964ல் சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'புதிய பறவை' திரைப்படம் இவருடைய திரைப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்ற கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது. அதன்பின் 1969-ல் இயக்குநர் கே பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற 'இரு கோடுகள்' திரைப்படம் இவருடைய நடிப்பாற்றலுக்கு மேலும் மகுடம் சூட்டியது. ‛எதிர்நீச்சல், தில்லு முல்லு' போன்ற திரைப்படங்களின் மூலம் தான் ஒரு நகைச்சுவை நடிகையாகவும் வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்திருப்பார்.



கதாநாயகியாக தான் நடிப்பேன் என்றில்லாமல் இரண்டாவது நாயகி, குணச்சித்ரம் ஏன் காமெடி வேடங்களில் கூட நடித்தவர். எந்த மொழிப் படங்களில் நடித்தாலும், அந்தந்த மொழிக்கான உச்சரிப்பை தன் சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசிய பெருமைக்குரியவர்

குடும்பம்

சவுகார் ஜானகியின் கணவர் பெயர் சங்கரமஞ்சி ஸ்ரீனிவாசராவ். இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு யக்ஞ பிரபா கோட்டி, சாச்சி ராவ் என்ற இரு மகள்களும், வெங்கடரமண சங்கரமஞ்சி என்ற 1 மகனும் உள்ளனர்.



பயோடேட்டா

இயற்பெயர் : ஜானகி
சினிமா பெயர் : சவுகார் ஜானகி
பிறப்பு : 12-டிசம்பர்-1931
இறப்பு : 21-ஆகஸ்ட்-2026
பிறந்த இடம் : ராஜமுந்திரி - ஆந்திர பிரதேசம்
கணவர் : சங்கரமஞ்சி ஸ்ரீனிவாசராவ்
குழந்தைகள் : 2 மகள்கள், 1 மகன்
பெற்றோர் : வெங்கோஜி ராவ் - சச்சி தேவி
உடன் பிறந்தவர்கள் : கிருஷ்ண குமாரி (சகோதரி)

விருதுகள்



2022ல் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வென்றார்.
1969ல் 'இரு கோடுகள்' திரைப்படத்தற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு விருது வென்றார்.
1984ல் பிலிம் பேர் 'வாழ்நாள் சாதனையாளர் விருது'
1987, 2007ல் ஆந்திர அரசின் நந்தி விருது பெற்றுள்ளார்
2012ல் சைமா 'வாழ்நாள் சாதனையாளர் விருது'

சவுகார் ஜானகியின் பிரபலமான தமிழ் திரைப்படங்கள்

1. வளையாபதி
2. ஆசை அண்ணா அருமை தம்பி
3. ஏழையின் அஸ்தி
4. நாக தேவதை
5. அபலை அஞ்சுகம்
6. அவள் யார்
7. நான் கண்ட சொர்க்கம்
8. பாக்கியலக்ஷ்மி
9. குமுதம்
10. பாலும் பழமும்
11. காணல் நீர்
12. பார்த்தால் பசி தீரும்
13. அன்னை
14. பார் மகளே பார்
15. புதிய பறவை
16. பச்சை விளக்கு
17. நாணல்
18. பணம் படைத்தவன்
19. நீர்க்குமிழி
20. பெற்றால்தான் பிள்ளையா
21. மகாகவி காளிதாஸ்
22. மோட்டார் சுந்தரம் பிள்ளை
23. பாமா விஜயம்
24. கண்கண்ட தெய்வம்
25. ஒளி விளக்கு
26. லட்சுமி கல்யாணம்
27. எங்க ஊர் ராஜா
28. ஜீவனாம்சம்
29. எதிர்நீச்சல்
30. உயர்ந்த மனிதன்
31. இரு கோடுகள்
32. காவல் தெய்வம்
33. அக்கா தங்கை
34. துணைவன்
35. குழந்தை உள்ளம்
36. காவியத்தலைவி
37. நடு இரவில்
38. கண்மலர்
39. பாபு
40. ரங்கராட்டினம்
41. திருநீலகண்டர்
42. நீதி
43. தெய்வம்
44. பாசதீபம்
45. கலியுக கண்ணன்
46. மனிதனும் தெய்வமாகலாம்
47. சினிமா பைத்தியம்
48. பிஞ்சுமனம்
49. உறவுக்கு கை கொடுப்போம்
50. தசாவதாரம்
51. தில்லு முல்லு
52. தீ
53. சிரஞ்சீவி
54. புது புது அர்த்தங்கள்
55. வெற்றி விழா
56. சிவா
57. அழகன்
58. ஹேராம்
59. வானவராயன் வல்லவராயன்
60. பிஸ்கோத்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !