உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லாலுக்கு அவமரியாதை : பாலிவுட் படத்தை வேண்டாம் என ஒதுக்கிய இயக்குனர்

மோகன்லாலுக்கு அவமரியாதை : பாலிவுட் படத்தை வேண்டாம் என ஒதுக்கிய இயக்குனர்


மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு '2018' என்கிற படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்று 230 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப், அதற்கு முன்பு 'ஓம் சாந்தி ஒசானா', 'முத்தச்சி' ஆகிய படங்களை இயக்கியிருந்தாலும், இந்தப் படம் அவரை முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அவர் மோகன்லால் மகள் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள 'தொடக்கம்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படம் வெளியாளியுள்ளது.

ஆனால் இந்தப் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே அவருக்கு பாலிவுட்டில் இருந்து நடிகர் ஆயுஷ்மான் குரானாவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அவரும் அதற்கு அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு அந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தார். அந்தக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லாலை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் ஜூட் ஆண்டனி. ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் மோகன்லால் நடிப்பது பற்றி பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

கதையை முடிவு செய்வதற்கு முன்பாகவே இது குறித்து தயாரிப்பாளர்களிடம் அவர் கேட்டபோது, முதலில் கதையை முழுமையாக முடிவு செய்யுங்கள், படித்துப் பார்த்த பிறகுதான் இரண்டாம் நிலை நடிகர்களை (secondary artists) பற்றி யோசிக்க முடியும் என்று மின்னஞ்சல் மூலம் பதில் அளித்துள்ளனர். மோகன்லாலை ஒரு இரண்டாம் நிலை நடிகர் என்பது போல அவமரியாதை செய்த அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் தொடர்ந்து பணியாற்ற விரும்பாத ஜூட் ஆண்டனி ஜோசப், அந்த நிறுவனத்திடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு அந்தப் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவரது 'தொடக்கம்' படம் வெளியாகி உள்ள நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !