உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'டோரதி' செப்.,25ல் ரிலீஸ்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'டோரதி' செப்.,25ல் ரிலீஸ்: கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்


'பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ' ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது தனது 10வது படத்தை இயக்கியுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். அவர் இசையமைக்கும் 1540வது படம் இது.

இந்த படத்தில் நடிப்பவர்கள், தலைப்பு உள்ளிட்ட விஷயங்களை இதுவரை வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த கார்த்திக் சுப்பராஜ், தற்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு அனைத்திற்கும் பதில் சொல்லியுள்ளார். 'டோரதி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம், வரும் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட பதிவில், ''எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான, பல ஆண்டுகளாக நான் உருவாக்க விரும்பிய ஒரு கதை இப்போது திரைப்படமாகிவிட்டது. அதுவும் இளையராஜா இசையமைப்பில்.. மேலும், இத்திரைப்படம் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (Toronto International Film Festival) உலக அளவில் முதல்முறையாகத் திரையிடப்பட அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்... வரும் செப்டம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எப்போதும் போல உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். இம்முறை எங்கள் 'டோரதி'க்காக இன்னும் சற்று அதிகமாகவே!' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !